வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – அமெரிக்க திறைசேரி செயலாளர் – ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலில் தெரிவிப்பு!

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்டுள்ள கடனைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகளை மேலும் வழங்குவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கடன்களை கையாள்வதில் தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டிய அமெரிக்க திறைசேரி செயலாளர், இலங்கையின் அர்ப்பணிப்புகளையும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த இணைந்து பயணிக்க தயார் - ஜோ பைடனுக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து!
12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டன - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்...
தரம் 01 மாணவர் சேர்க்கை பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|