12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டன – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, July 2nd, 2022

12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கைக்குப் புறம்பாக பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களின் விலை 10.24% அதிகரிப்பு என்பன உட்பட கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் 35% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான மிலன் மிராண்டா தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 10.24% குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் பஸ் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அனைத்து பஸ்களிலும் புதிய பஸ் கட்டணத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பான முறைகேடுகளை நடமாடும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் வழிகாட்டல்களை மீறும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலங்கையில் இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை - பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!
ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
பெற்றோல் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து எரிபொருள் மோசடி - மாஃபியாக்களால் தாம் பாதிக்கப்படுவதாக ...