வலிகாமம் மேற்கு பிரதேசசபை வீதிகளுக்கு பெயர்ப்பலகை!
Thursday, May 23rd, 2019
வலிகாமம் மேற்குப்பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப்பலகை பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவருவதாக சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வீதிகளுக்கு அதன் பெயர்கள் அடையாளப்படுத்துவது மிக அவசியம்.
ஒரு இடத்திற்கு செல்வதற்கும், தொகை மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கு இடங்களை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடிதங்களை வழங்கல் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்கும் பெயர்ப்பலகை அவசியம்.
இதனை அடிப்படையாகக் கொண்டு முதற்கட்டமாகச் சபையின் எல்லைக்கு உட்பட்ட 241 வீதிகளுக்கு பெயர்ப்பலகை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காகச் சபையால் 27 லட்சம் ரூபா செலவிடப்பட்டது.
வீதிகளுக்கான பெயர்கள் மூன்று மொழிகளிலும், அந்த வீதியின் தூரம் என்பன பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
Related posts:
மருந்து வகைகளில் 85 வீத தயாரிப்பு இலங்கையில் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
பழைய முறிகண்டி கிராமத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படுகள் வேண்டும் - பிரதேச மக்கள்!
மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!
|
|
|


