வலிகாமம் மேற்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!
Tuesday, December 11th, 2018
வலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காட்டுப்புலம் இளந்துளிர் விளையாட்டுக் கழகம், குஞ்சன்கலட்டி அறிவொளி விளையாட்டுக்கழகம், அராலி வடக்கு வானவில் விளையாட்டுக் கழகம், அராலி கிழக்கு கலைவாணி விளையாட்டுக் கழகம் ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
|
|
|


