வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!
Sunday, May 19th, 2019
நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள வலிகாமம் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு உடுவில் கோட்ட அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமாகாணத்தில் அதிக பாடசாலைகளைக் கொண்ட வயமாகக் காணப்படுகின்ற வலிகாமம் கல்வி வலயத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு வலயக்கல்விப்பணிப்பாளரை நியமிக்காமை வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
கல்வித் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்குகின்ற எமது வலயத்தின் செயற்பாடுகளைக் கொண்டு செல்லக்கூடிய எமது வலயத்தில் கடந்த காலத்தில் சுகாதாரக்கல்விப் பணிப்பாளராகக் கடமை ஆற்றிய சு.சுந்தரசிவத்தை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!
மே11 முதல் மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் ஆரம்பம் - ரயில்வே திணைக்களம் !
சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் – இன்றுமுதல் சட்டநடவடிக்கை என எச்சரிக்கின்றார் பிரதிப்...
|
|
|


