சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் – இன்றுமுதல் சட்டநடவடிக்கை என எச்சரிக்கின்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

Monday, November 9th, 2020

சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது போன்றவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதனை மீறுவோரைக் கைது செய்ய நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமைமுதல் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுப்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த நடவடிக்கைகள் மிகக் கண்டிப்பாக பின்பற்றப்படும் எனவும் நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறும்போது, முகக்கவசம் மற்றும் சமூக இடை வெளி தொடர்பாக மிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் எச்சரித்துள்ளார்..

கடந்த 8 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பாக 125 பேரைக் கைது செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்றுமுதல் மிக கண்டிப்புடன் நாடளாவிய ரீதியில் குறித்த கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: