வற் வரி தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவு விரைவில் சபாநாயகரிடம்!

Tuesday, October 18th, 2016

பெறுமதி சேர் வரி திருத்தம் தொடர்பான திருத்தச் சட்டம் மூல வரைவு தொடர்பான தீர்ப்பை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

திருத்தச் சட்டமூல வரைவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, சிசிர ஜயகொடி, சட்டத்தரணி தினேஷ் டி சில்வா ஆகியோர் தாக்கல் செய்த 4 மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எழுத்து மூலமான வாதங்களை முன்வைப்பதாக இருந்தால் அதனை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.மனுதாரர் சார்பில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, திருத்தச் சட்டமூல வரைவின் சில பந்திகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டினார்.

இதனால், சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.இதனை நிராகரித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பர்ஷான ஜெமில், திருத்தச் சட்டமூலத்தின் சகல பந்திகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

vat

Related posts:


மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் - விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!
நுரைச்சோலையில் சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது...
நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தி...