வறட்சி காரணமாக 150 பில்லியன் ரூபா மேலதிக செலவு – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
Sunday, January 15th, 2017
தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எந்தவித தடைகள் வந்தாலும் அதற்காக சரியான தயார் நிலையில் அரசாங்கம் இருப்பதாகவும், இதற்காக மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கிடையில் வறட்சி காரணமாக நாடு பூராகவும் ஒரு இலட்சத்து 20,000 ஏக்கர் வயல் நிலங்களின் விளைச்சலை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வயல் நிலங்களின் விளைச்சலை மீட்டெடுப்பதற்கு முடிந்தளவு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க கூறினார். இதுதவிர வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி சம்பந்தமாக சவாலான நிலை தோன்றியுள்ளதாக துப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

Related posts:
|
|
|


