வறட்சியான காலநிலை தொடரும் – வளிமண்டல திணைக்களம் !
Saturday, March 30th, 2019
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடர கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் நாட்டின் 6 மாவட்டங்களில் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்கு பின்னரே குறிப்பிடத்தக்களவான மழை வீழ்ச்சி பதிவாகும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீட்சை முறைகேடுகளை தவிர்க்க புதிய நடவடிக்கை!
டெங்கு நுளம்பற்ற பாடசாலைக்கான நடவடிக்கையை முன்னெடுங்கள் பாடசாலை சமூகத்திற்கு கல்வி அமைச்சர் அறிவுறுத...
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் வி...
|
|
|


