வருமானத்தை விட அதிக நிதி நோயை குணப்படுத்த செலவாகிறது – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த!

Monday, March 13th, 2017

நாட்டில் புகையிலை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட அதிக நிதி புகைத்தலால் பாதிக்கப்பட்டவர்களை சுகப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் செலவிட வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார்.

புகையிலை நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் வருடாந்தம் 100 பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுபான பாவனையால் வருடாந்தம் 35,000 பேர் உயிரிழப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியொரு சிகரட்டை விற்பனையை நிறுத்துவது தொடர்பான சட்டதிட்டங்களை தயாரிக்கும் யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக அவர தெரிவித்துள்ளார்.

அந்த யோசனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் சிகரட்டுக்களை பெட்டிகளாக மாத்திரம் விற்பனை செய்வதற்கான சட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: