இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள் – வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவிப்பு!

Friday, July 31st, 2020

நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 6 ஆயிரத்து 275 பேர் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

அவர்கள் வாக்களிப்பதற்காக 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே சமன் பந்துலசேன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

1981 இலக்கம் 1 நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 127 அ சரத்திற்கு அமைய தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையாளரிடம் விண்ணப்பித்த இடம்பெயர்ந்த வாக்காளர்களில் 6 ஆயிரத்து 275 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் 5 ஆயிரத்து 804 பேர் மன்னார் மாவட்டத்தையும் 463 பேர் வவுனியா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாவற்குழி விகாரைக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்ல முடியும் - சட்டம் அனைவருக்கும் ஒன்றே என்கிறார் வ...
இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – பலியாவோர் எண்ணிக்கையும் நாள...
உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேல...