வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி – வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவிப்பு!
Monday, September 6th, 2021
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்தள்ளது.
அத்துடன் இந்த கொடுப்பனவு 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செயலணி குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், வருமானத்தை இழந்தவர்கள் எவருக்கேனும் 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காவிட்டால் முறையீடு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
தமது முறையீட்டினை மாவட்ட அரசாங்க அதிபர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறும் செயலணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் செய்திகளை வழங்க புதிய நடைமுறை!
93 குழந்தைகளில் ஒருவருக்கு ஓடிசம்!
டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் – எச்சரிக்கின்றது தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!
|
|
|


