93 குழந்தைகளில் ஒருவருக்கு ஓடிசம்!

Friday, November 4th, 2016

நாட்டில் புதிதாக பிறக்கும் 93 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஓடிசம் (தற்சிந்தனை) நிலைமை அதிகம் காணப்படுவதை புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் சுவர்ண விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

பெற்றோர்கள் இது குறித்து அறிவுறுத்த வேண்டிய காலம் உருவாக்கியுள்ளது. புதிதாக பிறக்கும் குழந்தைகள் ஓடிசம் தன்மையுடையனவாகக் காணப்படுவதற்கு அதிக காரணமாக அமைவது பெற்றோரின் அறியாமையே, ஓடிச தன்மையுள்ள குழந்தையை பிறக்க முன்னர், ஸ்கான் மூலமோ, குருதிப் பரிசோதனைகள் ஊடாகவோ கண்டறிய முடியும். குழந்தை பிறந்த பின்னர் வளர்ச்சிக் கட்டங்களில் காணப்படும் வித்தியாசமான மாற்றங்கள் ஊடாகவே அதனைக் கண்டறிய வேண்டும். ஓடிசம் உள்ள பிள்ளைகளில் 100ற்கு 40வீத மாணவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்தி ரீதியில் பலவீதமான இவர்களுக்கு விசேட பேச்சுப் பயிற்சி வழங்கப்பட வேண்டியுள்ளது  – என்றார்.

images

Related posts: