விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லை! துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் !

Wednesday, November 14th, 2018

கல்வியமைச்சின் ஊடாக வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லையென துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மு.பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றமையால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகி;ன்றனர்.

மு.பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் கடந்த ஜீலை மாதத்துடன் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்படாது பாடசாலை அதிபர் பதவி வெற்றிடமாகக் காணப்படுகின்றது.

அண்மையில் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

இவ்வாறு இந்த முன்னணிப் பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் கூறுகையில் –

கல்வியமைச்சின் ஊடாக வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லை.

இருந்தபோதும் விரைவாக அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப மற்றும் உயர்தரப் பாடசாலைகளில் 26 பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: