வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 56 பேர் உயிரிழப்பு!

Monday, August 29th, 2016

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் 38,000 அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொழும்பில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட 3 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களுடனான 8 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: