வருகிறது புதிய காப்புறுதித் திட்டம் : மகிழ்ச்சியில் கடற்தொழிலாளர்கள்!

மீன்பிடி வள்ளங்களுக்கு காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்தார்.
எரிபொருள் விலை தொடர்பாக கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலைச் சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதனை கண்டறிவதற்காக நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கடற்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 4500 கடற்தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி முறை அறிமுகப்படுத்துவது குறித்தும் அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
Related posts:
வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல்!
கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேரிக்கு செலுத்த முடிந்துள்ளது - லிட்ரோ நிறுவன...
|
|