அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக உருவாக வேண்டும் – அதுவே எமது கட்சியின் நோக்கம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாளுமன்ற உறப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, May 2nd, 2023

அனைத்து மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவர்களது உழைப்புகளும் சுரண்டப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவர்களை பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக  உருவாக்குவதே இன்றைய உழைப்பாளர் தினத்தின் நோக்கமாகும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் அதற்காக எமது கட்சியும் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவும் பக்க பலமாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்’.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வழமைபோன்று ஈழ மக்கள் ஜனநாகக் கட்சியின் மேதின கூட்டம் அந்தந்த மாவட்டங்களின் கடட்சியின் நிர்வாக செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே திலீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது வவுனியா மாவட்டத்தை பொறுத்தளவில் பல்லின மக்கள் வாழும் ஒரு மாவட்டமாகும். அதேபோன்று இங்கு அதிகளவான பிரச்சினைகளும் மக்களிடையே காணப்படுகின்றது.

குறிப்பாக கடந்த காலங்களில் மக்களின் வாழிடங்களுக்கான உரிமங்கள் வழங்கப்படாதும் ஏழை உழைப்பாளர்கள் தாம் உழைக்கும் உழைப்பிற்கேற்ப ஊதியங்கள் கிடைக்கப்பெறாமலும் சுயநல அரசியல்வாதிகளால் அடிமைகளாக பார்க்கப்பட்ட நிலை காணப்பட்டது.

ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்னி மாவட்டத்தில் மீண்டும் காலூன்றியதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் காணிகளுக்கான உரிமங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என நாளாந்தம் மக்கள் பாரபட்சமின்றி தீர்வைப்பெற்று வருகின்றனர்.

எமது கட்சியின் நிலைப்பாடு அனைத்து மக்களும் சம உரிமை பெற்று சமத்துவமாக வாழவேண்டும் என்பதுதான். அதை வலியுறுத்தியே எமது கட்சியின் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றர்.

உழைப்பாளர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்படு மட்டுமல்லாது அவர்களுக்கான கௌரவமும் அந்தஸ்தும் வேற்றுமைகளற்ற வகையில் கிடைக்க வேண்டும் என்பதில் எமது கட்சியும்’ தலைமையும் உறுதியான இருந்து செயற்பட்டு வருகின்றது. அதற்காக நாம் ஒன்’றிணைந்து பல்வேறு செயற்றிட்ங்களையும் செயற்படுத்தி வருகின்றோம்.

அந்தவகையில் உழைப்பாளர்களின் ஏழை பாமர மக்களின் வாழ்வில் ஒளி பிறப்பதற்கான ஒவ்வொரு செயற்பாட்டையும் நாம் தடைகளை உடைத்தெறிந்து செயற்படுத்தி கொடுப்பதற்கு அயராது உழைத்தும் வருகின்றோம். அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி எமது கட்சியின் கரங்களை பலப்படுத்துவார்களானால் நிச்சயம் பாமர மக்களும் பொருளாதாரத்துடன் சிறப்பான வாழ்வியலை பெற்றுக்கொள்ள எமது கட்சியின் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா  வழிவகை செய்து கொடுப்பார் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை - பொதுசுகாதார ...
கரணவாய் பகுதியில் மினி சூறாவளி - 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிர...
சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் - ஜனாதிபதி கோட...