வருகின்றது அறிவை மையப்படுத்திய பொருளாதார முறை அறிமுகம்!

Thursday, November 10th, 2016

அறிவை மையப்படுத்திய பொருளாதார முறையை ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள்…,  இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பொது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.2017ஆம் ஆண்டு – வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்.

இதேவேளை 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாக காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

file_folder

Related posts: