வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் போது நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு அனுமதிக் கப்பட்ட நேரத்தை அதிகபட்சமாக 10 நிமிடங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் வரவு -செலவு திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவே...
கூடுகிறது அமைச்சரவை - இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்ப...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - மின்சக்தி மற்றும் எரிசக்த...
|
|