வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிப்பு!

Saturday, November 13th, 2021

2022 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வித முறைப்பாடுகளும் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூர் உற்பத்தியில் செய்யப்படும் முதலீடுகள் அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் என கூறினார்.

துணிகள் போன்ற பொருட்களின் உள்ளூர் உற்பத்திக்காக செய்யப்படும் முதலீடுகள் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என தான் நம்புவதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

ஏறாவூர் போன்ற கைத்தொழில் வலயங்களில் முதலீடு செய்வது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுவதோடு மேலதிக அந்நிய செலாவணி கிடைக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

தனது அமைச்சுக்காக வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் - அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவிப...
கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவை...
அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் - பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத த...