வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று!
Wednesday, June 27th, 2018
வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுகின்றது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா இம்மாதம் 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறும் இவ்வாலயத்தில் இன்று காலை தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று தொடர்ந்து அம்மன் உள் வீதியுலா வந்து காலை 9 மணியளவில் நாகபூசணி அம்மன் தேரில் ஆரோகரித்கவுள்ளார்
தேர்த்திருவிழாவில் நாட்டின் நாலா பக்கத்திலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை அடியவர்கள் அம்மனை மெய்யுருகி வழிபடுவதை காண முடிகின்றது.
Related posts:
இலங்கையில் இன்றுமுதல் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!
வெளிநாட்டு விமானங்கள் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும் - அனுமதி கொடுத்தது இலங்கை!
“நிபா” வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கை - சுகா...
|
|
|





