வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

Saturday, August 3rd, 2019

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ. 496 உயர்ந்து ரூ. 26, 976-க்கு விற்பனையாகி வருகிறது. விலை உயர்ந்தாலும் தங்கத்தின் விற்பனை பாதிக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விவகாரங்கள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சவரன் ஒன்றின் விலை ரூ. 496 உயர்ந்து ரூ. 26,976-க்கு விற்பனையாகிறது. தற்போதைக்கு தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச காரணங்களுக்காக தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அமெரிக்காவில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இவற்றின் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதன் விளைவாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 உயர்ந்துள்ளது. இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என நுகர்வோர் நம்புவதால் விற்பனை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இந்தியாவில் குறைய வாய்ப்பில்லை என்பதால், தங்கம் விலை குறைப்பு நடக்க சாத்தியம் இல்லை என்று தெரிகிறது.

Related posts: