டெங்குக் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு -அடையாள அட்டை வழங்கப்படுகின்றது!
Thursday, February 1st, 2018
வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ள டெங்குக் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நிலைமைகளை கருத்தில் கொண்டு கொழும்பு சுகாதார அமைச்சால் வடக்கு மாகாணத்துக்கு 40 டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேரடியாக கொழும்பு சுகாதார அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சேவையில் உள்ள காலத்தில் இவர்களுக்கான அடையாள அட்டை அவசியம் என்பது தொடர்பில் துறை சார்ந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைவாக கொழும்பு அமைச்சால் தற்போது உத்தியோகத்தர்களுக்கான ரிசேட் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் இல்லை - பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
பாதிட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி !
நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – தடுப்பூசியை பெற்றுக்கொள்வ...
|
|
|


