சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை- பாதுகாப்புச் செயலாளர்!

Tuesday, December 6th, 2016

சர்வதேச சமூகத்தின் வேண்டுதலுக்கு இணங்க நாங்கள் வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைநோக்கு எண்ணக்கருவின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் காலி ரிச்சர்ட் பத்திரன வித்தியாலயத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நில மெஹவர’ நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

வட கிழக்கு பகுதிகள் ஆபத்தில் இருப்பதாக சில தீவிரவாதிகள் பரப்பும் தவறான குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை. எவருக்கும் இந்தப் பகுதிகளுக்கு வருகை தந்து இப்பிரதேச வாழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பொருத்தமான வாழ்வாதார சூழல் தொடர்பாக ஆராய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் அரச படையினர் வசம் இருந்த காணிகளை மீண்டும் காணி உரிமையாளர்களிடம் சர்வதேச தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்கவில்லை மாறாக எங்டகளுடைய சகோதர சகோதரிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்கியுள்ளோம் என்றும் மேலும் குறிப்பிட்டார். மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை இனங்கண்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பெருத்தமான தீர்வை வழங்குவதே குறித்த இந்த செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டினார். இத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் 2017ம் ஆண்டு 14ஆம் திகதி ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

e5f48aad9af4ebdbc97033f78385971e_XL

Related posts:


அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் - அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெர...
பருத்தித்துறை பேருந்திலும் கோரோனா பாதித்த பெண் பயணம் : சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தல் - பருத்தித்...
அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை - இ...