வயல் நிலங்களில் சூரியஔி மின்னுற்பத்தி!

Thursday, September 28th, 2017

கைவிடப்பட்ட வயல் நிலங்களில் சூரிய ஔி மின்னுற்பத்திச் செயற்பாட்டை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கூடுதலான மின்சார பாவனை மற்றும் மின்தேவைப்பாடு காணப்படுகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இப்பிரதேசங்களில் சூரிய மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கான இடங்களைத் தேடிக் கொள்வது சிரமமாக காணப்படுகின்றது.இதனைக் கருத்திற் கொண்டு கைவிடப்பட்ட வயல்நிலங்களில் சூரிய ஔி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கான சாதனங்களைப் பொருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போதைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய சேவைகள் ஆணையாளரின் அனுமதியும் விரைவில் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.பொதுவாக சூரிய ஔி மூலம் ஒரு மெகாவோட் மின்சாரத்தை தயாரிக்க 3 தொடக்கம் ஐந்து வரையான ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: