வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
Monday, March 22nd, 2021
வட மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 290 பேருக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 7 பேரும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் உள்ள வெற்றுக் காணிகள் தொடர்பில் அறிக்கை கோரல்!
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது
இலங்கை - மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - கடன் மறுச...
|
|
|


