வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!
Monday, April 15th, 2024வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,536.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 1,432.2 மில்லியன் டொலர்களாகும்.
இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய சுற்றுலா வருகையின் மூலம் கிடைத்த வருவாய் 1,025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் - புவிச்சரிதவியல் ஆய்வு சு...
ஒக்ரோபரில் உயர்தர பரீட்சை – அடுத்து ஆண்டு ஜனவரியில் சாதாரண தர பரீட்சை - நடத்த தீர்மானித்துள்ளதாக பி...
பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்கள் அவசியம் - அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


