ஒக்ரோபரில் உயர்தர பரீட்சை – அடுத்து ஆண்டு ஜனவரியில் சாதாரண தர பரீட்சை – நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, April 3rd, 2022

2022 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இடம்பெற வேண்டிய சாதாரண தர பரீட்சைகளை 2023 ஜனவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள நிலையில் மூன்று மாத இடைவெளியில் மீண்டும் ஆகஸ்டில் உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: