வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, February 23rd, 2023

8 விடயங்களை கோரிக்கையாக முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இன்று காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர சுகாதார சேவையாளர் சங்கத்தின் பிரதி செயலாளர் சுமித் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வைத்தியசாலைகளுக்கு பிரவேசித்த நோயாளர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது

அதேநேரம், பதுளை பொது வைத்தியசாலையின் சுகாதார சேவையாளர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 8.30 முதல் அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

மருந்து தட்டுப்பாடு, அறுவைச் சிகிச்சை குறைக்கப்பட்டமை, அதிக வரிச்சுமை மற்றும் சுகாதார பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வை...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் - நிதி இராஜா...