சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, May 12th, 2021

சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்பதாக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பாக தொலைக்காட்சி விளம்பரங்களின் அதிகரிப்பு மற்றும் போக்குகள் தொடர்பாக 09 ஆசிய நாடுகளில் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளை ஈடுபடுத்தி ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் ரேலர்ஸ் பல்கலைக்கழகமும் உடன்பாடொன்றை எட்டியுள்ளது.

குறித்த ஆராய்ச்சி கருத்திட்டத்திற்காக கனடா சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம் மலேசியாவின் ரேய்லர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நிதியனுசரணை வழங்குகின்றது.

அதற்கமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்குத் தேவையான நிதி மலேசியாவின் ரேலர்ஸ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே முன்மொழியப்பட்ட சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: