வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி!
 Friday, February 21st, 2020
        
                    Friday, February 21st, 2020
            
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்த அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு –
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதி ஒன்றை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை மருதங்கேணி வீதி (B371) புனரமைத்தல் / செப்பனிடுதல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தில் 4 ஆவது பொதி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிற்கமைய M\s NEM Construction (Pvt) Ltd என்ற நிறுவனத்திடம் 1684.81 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        