வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது, கார் ஒன்றில் பயணித்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில். வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
முன்விரோதம் காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கவேண்டும் - பிரதமர்!
கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்!
ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது - அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப...
|
|
|


