ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரல் மேலும் கூறுகையில் –

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்காமல், சிலர் குறை கூறுகின்றனர்.

ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அதில் ஒன்றை குறிப்பிட்டுக் கூறுவதென்றால், பெளத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக்கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அவ்வாறு கூறப்பட்டிருப்பினும், பொதுபல சேனா அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாம் போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றும் தெரிவித்தள்ள அமைச்சர் பீரிஸ் மத்ரசா பாடசாலைகளை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் நாம் யாரையும் பாதுகாக்கவும் இல்லை. யாரையும் கஷ்டத்துக்குள்ளாக்கவும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு நாம் பொறுபேற்கவும் முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: