வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலிப் போராட்டம்!
Wednesday, March 8th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர நியமனம் கோரிக் கடந்த-27 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று புதன்கிழமை(08) பத்தாவது நாளாகவும் தீர்வின்றித் தொடர்கின்றது.
இந்த நிலையில் தமது போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் ஒரு மணித்தியால மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்பகல்-10.30 மணி முதல் 11.30 மணி வரை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது தமது முகங்களைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு வேலையற்ற பட்டதாரிகள் வட மாகாண சபை, மத்திய அரசாங்கத்திற்கெதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் ‘பத்து நாளாய்த் தூக்கமில்லை’, ‘வடக்கு மாகாண அரசே தூங்காதே!’, ‘மத்திய அரசே தீர்வு தா’ உள்ளிட்ட கோஷங்களை ஆவேசமாக எழுப்பினர். தொடர்ந்து கவனயீர்ப்பு வீதி நாடகமும் நடைபெற்றது.
Related posts:
தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவா...
விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயல...
தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
|


