விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!
Monday, February 6th, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் இல்லாததால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த சாகர காரியவசம், தேர்தலில் வெற்றிக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
டொலரின் பெறுமதியில் மாற்றம் - தங்கத்தின் விலையும் பாரிய அளவில் வீழ்ச்சி!
நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு - ஜனாதிபதி உறு...
நாடாளுமன்றத் தேர்தல் - உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு அவசர அறிவிப்பு...
|
|
|


