டொலரின் பெறுமதியில் மாற்றம் – தங்கத்தின் விலையும் பாரிய அளவில் வீழ்ச்சி!

Wednesday, March 8th, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

இதேவேளை உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 592,984.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,350.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,450.00 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.=

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Related posts:

நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு  மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை!
பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
ரஷ்யா - உக்ரைன் போர் - பாதுகாப்பு காரணமாக விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர...