பலாலி சர்வதேச விமான நிலைய பயணிகள் வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

விமான நிலையத்தில் தற்போதுள்ள பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துதல், டியூட்டி பிரியை ஸ்தாபித்தல், சுகாதார வசதிகளை அதிகரித்தல், குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளுக்கான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பயணிகள் வசதிகள் விரிவுபடுத்தப்படும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் விமான சேவைகள் அதிகரிப்பதன் காரணமாக பலாலி விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 200 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பலாலிக்கு தினமும் விமான சேவைகள் இடம்பெறுவதுடன், 60 பயணிகள் பயணிக்கும் வகையிலான விமானங்களே பலாலிக்கு இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: