நாடாளுமன்றத் தேர்தல் – உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு அவசர அறிவிப்பு!
Friday, November 8th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27 ஆம் திகதிமுதல் நேற்றுவரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்று (8) முதல் தபால் நிலையங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் இன்று தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
அதற்காக தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
00
Related posts:
சக்திமிக்க நாடொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு - ஜனாதிபதி
தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
திறைசேரியால் யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன – மத்த...
|
|
|


