கல்வியற் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர் உள்வாங்கல் தொடர்பான வர்த்தமானி!

Wednesday, November 8th, 2017

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல் – 2017 தொடர்பான வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

  1. இது 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ. த.) பரீட்சையில் சித்திபெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். (புத்த சமயம், கத்தோலிக்க சமயம் அல்லது கிறிஸ்தவ சமயம் ஆகியன தொடர்பாக 4.5,4.8 ஆம் பகுதி மற்றும் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் தொடர்பாக 4.24.4 ஆம் பகுதியைப் பார்க்கவும்.)
  2. 1.2 தான் விண்ணப்பிக்கின்ற பாடநெறியின் கீழ் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் மிகுந்த அவதானத்துடன் வாசித்து விளங்கிக்கொண்டு விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்துவது தொடர்பான பொறுப்பு விண்ணப்பதாரிகளுக்கு உரித்தாகும்.
  3. 1.3 வர்த்தமானி அறிவித்தலில் ”விண்ணப்பத்தை தயாரிப்பதற்கான அறிவுறுத்தல்” நிரலில் 7.0 மற்றும் 7.1 இன் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடநெறிக்கும் சேர்த்துக் கொள்ளப்படும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை தொடர்பாக விசேட கவனத்தை செலுத்த வேண்டும்.
  4. 1.4 விண்ணப்பப்படிவங்கள் 2017.11.24 ஆந் திகதிக்கு முன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். (10.5 பந்திக்கமைவாக இவ்விடயத்தை பின்பற்றவும்)

Related posts: