வடமாகாண கைத்தொழிற்றுறை திணைக்களத்தினால் கொள்கை திட்டத்தை வகுப்பதற்கான செயற்றிட்டம்!

வடமாகாண தொழிற்றுறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் 10 வருடங்களில் கொள்கை திட்ட வகுப்பை உருவாக்குவதற்காக அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீ மோகனன் தலைமையில் மாவட்டச்செயலகத்தில் நடைப்பெற்றுள்ளது
மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் தெளிவூட்டல் மற்றும் கொள்கை திட்ட வகுப்பில் சேர்க்கவேண்டிய விடையங்களை கேட்டறிவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.
இவ்வாறான கொள்கை திட்ட வகுப்பை உருவாக்குவதன் மூலமாக மாகாணத்தில் காணப்படும் குடிசை கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில்களை பாரிய அளவிலான தொழிற்றுறையாக விரிவுப்படுத்த முடியும். இத மூலம் உற்பத்தியாகும் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றப்பட்டு சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு வடமாகாண தொழிற்றுறை பணிப்பாளர் செ.வனஜா அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் பல்கலைகழக முகாமைத்துவ பீட பேராசிரியர் சிவேசன் சிவானந்தமூர்த்தி கலந்துக்கொண்டு கொள்கை வகுப்பு திட்டம் தொடர்பான தெளிவூட்டலை வழங்கினார்.
பல்வேறு நிதிமூலங்களில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் சில இயங்காதநிலையிலும் சில பகுதியளவில் இயங்குவதாகவும் காண்டறியப்பட்டுள்ளது. கொள்கை திட்ட வகுப்பின் மூலம் அவற்றை முன்னுரிமை வழங்கி இயக்குவதற்கான வழிமுறைகளை செய்யவேண்டுமென கூறப்பட்டதுடன், நிகழ்வில் அரச திணைக்கள அதிகாரிகளால் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாகாண பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
000
Related posts:
|
|