வடமாகாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தல்!
Thursday, December 17th, 2020
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.
Related posts:
பட்டதாரிகளுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது - தேசிய பட்டதாரிகள் மையம் தெரிவிப்பு!
கொரோனா சந்தேகம்: மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட சடலம்?
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் - மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள...
|
|
|


