வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின்தடை  

Saturday, October 7th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை  தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம்,  இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் , நவக்கிரி, நிலாவரை, சிறுப்பிட்டி மேற்கு, சுதந்திரபுரம், குட்டியப் புலம் கலைமகள் வீதி, ஆவரங்கால், வாதரவத்தை, பெரிய பொக்கணை, புத்தூர், ஊரணி, வீரவாணி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல்  மாலை-05 மணி வரை கிளிநொச்சியில் சிலாவத்தை, உடுப்பிக்குளம், அளம்பில், குமுழமுனை, செம்மலை, நாயாறு, கொக்குத்  தொடுவாய்,கருநாட்டங்கேணி, கொக்கிளாய், ஒலுமடு, சேனைப்புலவு, ஒதியமலை, பட்டிக் குடியிருப்பு, மருதோடை, கற்குளம், கோவில் புளியங்குளம், நெடுங்கேணி, மொபிற்றல் கோபுரம், நெடுங்கேணி நீர்ப்பாசன சபை, கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் இலுப்பையடி, பஸார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக...
இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப...
இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு – பொது நிர்வாக அமைச்...