வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா இன்று!
Wednesday, October 4th, 2017
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(04) காலை-08 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை வியாழக்கிழமை மாலை-05 மணியளவில் வங்கக் கடலில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், வெள்ளிக்கிழமை காலை கேணித் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும். ஆலயத் தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வழமை போன்று இவ்வருடத் தேர்த் திருவிழாவிலும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
மீதொட்டமுல்ல சம்பவம் : தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் வெற்றிகர...
சந்நிதியான் ஆலய வளாக கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!
|
|
|


