வடமராட்சியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை –சந்தேகநபர் கைது!
Wednesday, September 16th, 2020
வடமராட்சி பகுதியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் வடமராட்சி வியாபாரிமூலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 40 வயதான ஒருவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் வயது 39 என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளானர்.
Related posts:
மீண்டும் உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. - அமைச்சர் ஜனக பண்டார !
சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதி...
|
|
|


