வடமராட்சியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை!
Friday, April 9th, 2021
கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் நேற்று காலை 8 மணிக்கு கரை திரும்பவேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையுமே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வா...
இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல் - கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு இந...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!
|
|
|


