வடபகுதி பாடசாலைகளுக்கு உணவு மானியம் வழங்கியது ஜப்பான்!

Saturday, September 10th, 2016

உலக உணவு திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசாங்கம் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு உணவு மானியமாக 239 மில்லியன் யென்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான ஒப்பந்தம் ஜப்பானின் விஷேட அதிகாரம் பெற்ற தூதுவரான கசுயோஷி யுமெட்டோவுக்கும் உலக உணவுத்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எர்த்ரின் கசினுக்குமிடையில் நேற்று (9) கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஜப்பான் 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 740 மில்லியன்களை இலங்கைக்கு உணவு மானியமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Untitled-2 copy

Related posts: