தேர்தல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சில யோசனைகள் முன்வைப்பு!

Tuesday, September 7th, 2021

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகள் முன்னிலையாகி தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

இதற்கமைய, மக்கள் ஜக்கிய முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய விடுதலை மக்கள் கட்சி என்பனவும் குறித்த நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் நேற்று முன்னிலையாகியிருந்தன.

இந்த சந்திப்பானது நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றதாக நாடாளுமன்ற சபை முதல்வர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் முன்னணி, அரசியலமைப்பின் படி தேர்தல்கள் உரிய நேரத்தில் காலந்தாழ்த்தாது நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இதேவேளை யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கும் நேற்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த கட்சி குறித்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருக்கவில்லை என்பதுடன் இன்றையதினம் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி யோசனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: