இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்: இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்!

Wednesday, November 14th, 2018

இலங்கை மக்களே தங்களுக்கு யார் தேவை என்பதைத் தீர்மானிக்கட்டும் என்பதே இந்தியாவி;ன் அணுகுமுறையாக அமைய வேண்டுமென இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான தலையிடுவதற்கான திறனை சீனா கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள கபில் சிபல் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதற்கு சீனா உதவியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ தான் சீனாவிற்கு நெருக்கமானவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளதால் சீனா மகிந்த ராஜபக்ஷவே தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென விரும்புகின்றது என்ற அனுமானத்திற்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன்பொறி குறித்த நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளபோதிலும் அவர் இந்தியாவிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு சீனா ஆதரவைப் பயன்படுத்துவார் எனவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனாவிற்கு இடையிலான பூகோள அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ள மாலைதீவை சுட்டிக்காட்டியுள்ள அவர் மாலைதீவில் இந்தியா எதுவும் செய்யவில்லை. இதேபோன்று உள்ளுர் உணர்வுகளின் அடிப்படையிலே இலங்கை மக்களே தங்களுக்கு யார் தேவை என்பதை தீர்மானிப்பதற்கு இந்தியா விட்டுவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: