நாடுமுழுதும் QR முறைமை அமுலில் – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால் கிராமப்புற மக்கள் அவதி!

Monday, August 1st, 2022

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையான QR முறைமையின் அடிப்படையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

சில எரிபொருள் நிலையங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், சில எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக வாகனங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை காண முடிந்ததுடன் பல இடங்களில் அந்தந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள்  தமக்குரிய அல்லது தமது பகுதி நிரப்பு நிலையங்களில் தமக்குரிய எரிபொருள் பெறுவதில் வேறு பகுதி வாகன உரிமையாளர்களினால் தடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக ஒரு பிரதேசத்தில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமே இருக்கும் நிலையில் அந்த நிரப்பு நிலையத்தில் குறைந்தளவான எரிபொருள் கொள்வனவு செய்யப்படும் நிலையில் வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் எந்து வரிசைகட்டி எரிபொருள் பெற முயற்சிப்பதால் அப்பகுதி மக்கள் தமக்கு எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொள்வதாக கற்றம் சாட்டுவதுடன் அவ்வாறு ஒரு எரிபொருள் நிரப்பு நலையம் இருக்கும் பிரதேசங்களில் அப்பிரதேச மக்களுக்கே கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை துறைசார் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

வலுசக்தி அமைச்சின் ஊடாக ஆயிரத்து 140 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக 10 இலட்சம் பேருக்கு இதுவரையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது இடம்பெறும் முறைக்கேடுகளை கட்டுப்படுத்துவதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: