கடந்தாண்டு இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு – ஏற்றுமதி அபிவிருத்தி சபை தகவல்!

Tuesday, January 31st, 2023

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.6% அதிகமாகும். அத்துடன் 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 12.48 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதேநேரம் 2021 ஆம் ஆண்டை விட ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி கடந்தாண்டு 9.56% அதிகரித்து 5.9 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபை வெளியிட்ட தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் மின்சார மற்றும் மின்னணு பாகங்கள் ஏற்றுமதியின் வருவாய் 14.68% அதிகரித்து 483 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

எவ்வாறாயினும், தேயிலையின் ஏற்றுமதி வருமானம் 4.95 வீதத்தால் குறைந்து சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இறப்பர் மற்றும் இறப்பர் உற்பத்திப் பொருட்கள் 6.79% குறைந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைந்துள்ளது.

தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 2.27% குறைந்து 817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக EDB தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்தாண்டு முழுவதும் உள்ளூர் வணிகங்கள் பல மூலோபாய மற்றும் பிற சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், ஏற்றுமதி சாதகமான பெறுபேறுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்த்க்கது;

Related posts: